என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன்: இயக்குனர் மாரி செல்வராஜின் காதல் பேச்சு..

Web Ads

இயக்குனர் மாரி செல்வராஜ் தன் மனைவியிடம் விடுத்த சபதம் என்ன என இங்கே பார்ப்போம்..

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து கர்ணன், மாமன்னன் என கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடம் பிடித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வாழை’ திரைப்படம், மிகவும் விரும்பி பேசப்பட்டது. இப்படம், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியதாக கூறியிருந்தார்.

இத்தகு, வெற்றியை தொடர்ந்து, தற்போது கபடி வீரரின் வாழ்க்கையை பற்றிய படமாக, துருவ் விக்ரம் நடிப்பில், ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தில், துருவ் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இதுதவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தையும் இயக்கும் பொருட்டு, அவரிடம் கதையொன்று சொல்லி எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.

இவ்வாறான பிஸியில் வலம் வரும் இவர், ‘தான் காதல் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்,

‘என்னிடம் காமெடி படம் பண்ண கதைகள் எதுவும் இல்லை. ஆனால், என்னுடைய மனைவி திவ்யா, என்னிடம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு காதல் படம் பண்ண சொல்லி கேட்ருக்காங்க.

எந்த ஒரு சமூக அர்ப்பணிப்பும் இன்றி, முழுக்க முழுக்க காதல் சார்ந்த படமாக அது இருக்க வேண்டும்’ என என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக அந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பேன்’ என கூறியிருக்கிறார்.

mari selvaraj says he like to direct love movie
mari selvaraj says he like to direct love movie