
திரிஷா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்குகிறாரா?: வைரலாகும் தகவல்கள்..
செம பிஸியில் ஜொலிக்கும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றிய விவரம் காண்போம்..
நடிகை திரிஷா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும், சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள ‘மாசாணி அம்மன்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்தில் திரிஷா நடித்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சினிமாவை நடிப்பிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் போர் அடித்து விட்டது மட்டுமின்றி, அவருக்கு மனச்சோர்வும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவரது தாயிடம் சொன்னபோது அவர் சம்மதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடந்துள்ளது.
திரிஷா தனது திருமணம் குறிந்த தகவல் தற்போதைக்கு எதுவும் இல்லாததால், அரசியலில் குதிக்கும் முடிவில் இருக்கிறாரா? அது, விஜய்யின் தவெக கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறாரா? என இணையத்தில் கேள்விகள் பரவி வருகிறது.
இது குறித்து, வெளிப்படையான பதிலை திரிஷா தெரிவிக்காமல் இருப்பது ஏன்? இச்சூழலில், விஜய் நடிக்கும் கடைசிப் படம் ரிலீஸானால், திரிஷா எடுத்துள்ள முடிவு தெரியவரும் எனவும் இணைய வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
