
சிவகார்த்திகேயன் ஹீரோவாக, ரவிமோகன் வில்லனாக நடிக்கும் ‘பராசக்தி’ படம்: அப்டேட்ஸ்..
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படம் புறநானூறு கதையா? இல்லை. இப்படம், 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் படம் என கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு (சிவாஜி கணேசன் நடித்த)’பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் 1952-ஆம் ஆண்டு வெளியானது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை எழுதி இருந்தார்.
பராசக்தி என பெயரிடப்பட்டு, சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில், எஸ்கேவுக்கு ஜோடியாக ‘புஷ்பா-2’ புகழ் ஸ்ரீலீலா வருகிறார். ரவிமோகன் வில்லனாகவும், அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடிக்க உள்ளனர்.
