‘மதராஸி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏ.ஆர்.முருகதாஸ்-எஸ்கே மிகவும் எதிர்பார்ப்பு

வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி என்ற நிலையில் சிவகார்த்திகேயனும், தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் முருகதாசும் உள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ பட மெகா வெற்றிக்குப் பிறகு, ‘மதராஸி’ படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் ‘மதராஸி’ செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ படம் வெளியாகி விட்டதால், ஏ.ஆர்.முருகதாஸ் முழுமையாக ‘மதராஸி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த விதமாய் ஈர்க்கப்படவில்லை. அதனால் முருகதாஸ் ‘மதராஸி’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அவ்வகையில், ‘மதராஸி’ எஸ்கேவுக்கும் முருகதாசுக்கும் மீண்டும் ஒரு மெகா ஹிட் படமாகுமா? பொருத்திருந்து பார்ப்போம்.!