அஜித் பிறந்த நாளில், தியேட்டர்களில் மீண்டும் திருவிழா: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

‘தல’ அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1-ந்தேதி வருகிறது என்பது தெரிந்ததே. இதையொட்டி ‘தல’ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. எப்டின்னு பார்ப்போம், வாங்க..

அதாவது, அஜித் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த ‘வீரம்’ படமும் மே 1-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. ‘வீரம்’ பட ரீ ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் ‘குட் பேட் அக்லி’ வில்லன் அர்ஜுன் தாஸ்.

ஒரே நாளில் 2 படங்கள் ரீ ரிலீஸ் ஆவதால் குஷியில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இனியென்ன, தியேட்டரெல்லாம் திருவிழாதான்.!

இதற்கிடையே ‘குட் பேட் அக்லி’ படம் கலவையான விமர்சனம் பெற்று, வசூலும் அதிகரித்து, 5 நாட்களில், ரூ. 200 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித் மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பி விட்டார். இந்த ஆண்டு கார் ரேஸ் ஆண்டு என அவர் முடிவு செய்துவிட்டார். இதுவரை இரண்டு ரேஸ்களில் அஜித் அணி வெற்றி பெற்றிருக்கிறது. இனி, நடக்கும் ரேஸ்களிலும் ‘தல’ அணி வெற்றி பெற ரசிகர்கள் வேண்டுதலாய் உள்ளனர்.

actor ajith birth day celeberation two re release movies