கவின் – நயன்தாராவின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்

Web Ads

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

Web Ad 2

ஏற்கனவே வெளியான படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் **ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்** என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களை பின்னணியாகக் கொண்டு கதை நகர்வதாகவும், குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத குடும்ப பொழுதுபோக்கு படங்களின் உணர்வை ‘ஹாய்’ திரைப்படம் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட லோகேஷ் கனகராஜின் வெற்றிப் படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதும், நயன்தாரா – கவின் முதல் முறையாக இணைந்து நடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அனுபவம் வாய்ந்த நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.