‘மஹாவீர் கர்ணா’ படத்தில் இணைந்தார் ராகவா லாரன்ஸ்!

Web Ads

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிக்கப்பட்டுள்ளது. பென் மூவீஸ் நிறுவனத்தின் ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, RV Studios மற்றும் Sri Neeladri Productions இணைந்து தயாரிக்கின்றன.

மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

கர்ணனின் வீரமும், கௌரவமும், விசுவாசமும், தியாகமும் நிறைந்த கதையை பிரம்மாண்டமான திரை அனுபவமாக வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக புராண காலத்தை கண்முன் கொண்டுவரும் பிரம்மாண்ட அரங்குகள், பிரமிக்க வைக்கும் கலை வடிவமைப்புகள், போர் காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

கர்ணனின் கதையை உணர்வுப்பூர்வமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சிப்படுத்த உள்ள இயக்குநர் ரமேஷ் வர்மா, இப்படத்தின் மூலம் கர்ணனின் உலகத்தை ரசிகர்களின் கண்முன் கொண்டுவர உள்ளார்.

Web Ad 2

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 2027-ம் ஆண்டு உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.