தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன் – நடிகை நிதி அகர்வால்

Web Ads

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்தகட்டமாக பல்வேறு மொழிகளில் வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தும் நோக்கில் பயணித்து வருகிறார்.

‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை ஒரே நேரத்தில் திறம்பட கையாண்ட நிதி அகர்வால், தொடர்ந்து கடினமாக உழைப்பதும் தன்னை பிஸியாக வைத்திருப்பதும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது இலக்குகள்தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. இயல்பிலேயே நான் கடினமாக உழைப்பவள். நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ, அந்த இடத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

Web Ad 2

முன்னணி நடிகர்களின் பிரம்மாண்டமான படங்களில் வெறுமனே ஒரு கதாபாத்திரமாக மட்டும் இடம்பெறுவதைவிட, கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்கவே விரும்புவதாக நிதி அகர்வால் தெரிவித்துள்ளார். ஒரு நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களையும் கதாபாத்திரங்களையும் எதிர்பார்ப்பதாகவும், அதற்கான களமாக தமிழ் சினிமாவையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் பணியாற்றி வரும் நிதி அகர்வால், சமீபத்தில் பவன் கல்யாணுடன் நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் பிரபாஸுடன் நடித்த ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களால் கூடுதல் கவனம் பெற்றுள்ளார்.

திரையுலகிலும் ரசிகர்களின் மனதிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதே தனது விருப்பம் என கூறியுள்ள நிதி அகர்வால், தென்னிந்திய சினிமாவில் அடையாளம் காணக்கூடிய பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்துவதே தனது அடுத்தகட்ட இலக்கு என தெரிவித்துள்ளார்.