நானியின் “தி பாரடைஸ்” படத்தின் டீசர் வெளியானது

‘தி பாரடைஸ்’ டீசர் வெளியீடு: நானியின் மிரட்டலான அவதாரம்… அனிருத்தின் பின்னணி இசையில் மிரள வைத்த பிரம்மாண்ட காட்சிகள்!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி பாரடைஸ்’ (The Paradise), இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் ‘ஆயா ஷேர்’ பாடல் என வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
“நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு… நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது” என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்த டீசர், அடக்குமுறை மற்றும் வன்முறையால் சூழப்பட்ட உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை மையமாகக் கொண்ட கதையை காட்சிப்படுத்துகிறது. அந்த இருளில் இருந்து சக்திவாய்ந்த புரட்சியாளரான ‘ஜடல்’ எழுச்சி பெறும் விதம், ஒவ்வொரு ஃப்ரேமிலும் தீவிரத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.
இந்த டீசரின் மிகப்பெரிய பலமாக அதன் காட்சி மொழி அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் தோன்றும் காகத்தின் உருவகம், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருப்பது கதைக்கு கூடுதல் ஆழத்தை அளிக்கிறது.
சண்டைக் காட்சிகளும் டீசரின் முக்கிய அம்சமாக திகழ்கின்றன. கோடாரி மோதல், சிறைச்சாலை சண்டை, வாள் சண்டை, கைமாறும் மோதல்கள், வெடிப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கிளர்ச்சி காட்சிகள் என ஒவ்வொரு தருணமும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நானி, இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் தீவிரமான நடிப்பின் மூலம் கதாபாத்திரமாகவே மாறியிருப்பது டீசரின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.
நானியுடன் மோகன் பாபு, கயாடு லோஹர், ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்aளனர்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உணர்வுகளையும் பிரம்மாண்டத்தையும் சமநிலைப்படுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி, SLV Cinemas நிறுவனம் சார்பில் மிகப்பெரிய தயாரிப்பு மதிப்புகளுடன் படத்தை உருவாக்கியுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் டீசர் கவனம் ஈர்க்கிறது. அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு, சி.ஹெச். சாயின் ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் உலகத்தை உயிர்ப்பிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியின் தீவிரத்தையும் பல மடங்கு உயர்த்தி, டீசருக்கு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்டமான இந்த அதிரடி திரைப்படம் செப்டம்பர் 24 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ள ‘தி பாரடைஸ்’, பெரிய திரையில் வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை டீசர் ஏற்படுத்தியுள்ளது.