அஜித் செய்ய விரும்பியதை, படமாக்கி உள்ளேன்: இயக்குனர் மகிழ் திருமேனி அப்டேட்ஸ்..

Web Ads

‘தல’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படம் குறித்து, இயக்குனர் மகிழ் திருமேனி முதன் முறையாக தெரிவித்துள்ள தகவல் காண்போம்..

‘விடாமுயற்சி, திரைப்படத்தை ஜனவரி 26-ந்தேதி அல்லது குடியரசு தினத்தை முன்னிட்டோ அல்லது பிப்ரவரி மாதத்திலோ வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

ஜனவரி 26 அல்லது பிப்ரவரி இறுதிக்குள் இப்படத்தை படக்குழு வெளியிடும் என்றே தெரிகின்றது. ஏனென்றால், ஏப்ரல் மாதம் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகின்றது.

எனவே, அதற்கு ஒரு மாதம் முன்னரே விடாமுயற்சி வெளியாகலாம். அதுமட்டுமல்லாமல், விடாமுயற்சி திரைப்படம் நினைத்ததை விட சிறப்பாக வந்துள்ளது. மகிழ் திருமேனி ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை செதுக்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே, ரசிகர்களின் காத்திருப்பிற்கு ஏற்ற ஒரு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘விடாமுயற்சி’ படம் குறித்து முதன்முறையாக இயக்குநர் மகிழ் திருமேனி தகவல் தெரிவிக்கையில், ‘இந்தப் படம், அசாதாரண ஹீரோவை கொண்டிருக்கும். வழக்கமான, மாஸ் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படங்களை போல் அல்ல. நான் விரும்புவதெல்லாம், எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி, திறந்த மனதுடன் திரையரங்குக்கு வருவதுதான்.

‘விடாமுயற்சி’ என்பது, உங்களையும் என்னையும் போன்ற ஒரு சாதாரண மனிதனைப் பற்றி பேசும் படம். ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும், அந்த சாதாரண மனிதன் தனக்கு இருக்கும் சக்திக்கு உட்பட்டு போராடுகிறான்.

இதைத்தான் அஜித் செய்ய விரும்பினார். நான் அதை அவருக்காக செய்தேன். இதனை ரசிகர்கள் வரவேற்பர் என நிச்சயம் நம்புகிறேன்’ என்றார்.

what did ajith like in vidamuyarchi director magizh thirumeni
what did ajith like in vidamuyarchi director magizh thirumeni