கௌதம் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடித்து தயாரித்த ‘டாமினிக்’ திரைப்படம் ரிலீஸ் அறிவிப்பு..

Web Ads

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ படம் வெளியாகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..

‘மின்னலே’ படம் தொடங்கி ‘காக்க காக்க’, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து இயங்கிய கௌதம், சில காரணங்களால் இயக்கத்திலிருந்து நடிப்பில் பிஸியானார்.

அவ்வகையில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லியோ, கருமேகங்கள் கலைகின்றன என பல படங்களில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்தும் வருகிறார். இயக்கம் போலவே நடிப்பிலும் தனது திறமையை காண்பித்து வருகிறார் .

இந்தச் சூழலில் அவர் மீண்டும் படம் இயக்க வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டதற்கு ஏற்ப, மம்முட்டியை வைத்து ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர், கௌதம் மம்முட்டியுடன் முதன்முறையாக இணைவதாலும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஸ்டைலிஷாக கவனத்தை ஈர்த்தது.

படம், நகைச்சுவையை மையப்படுத்தி அமைந்துள்ளதாகவும்,மம்முட்டி துப்பறிவாளராக வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில், மம்முட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், படத்தை தயாரிக்கவும் செய்கிறார். மேலும் படத்தில் சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படம் ஜனவரி 23-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கௌதம் மற்றும் மம்முட்டி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

gautham menons dominic movie will hits screen on january 23
gautham menons dominic movie will hits screen on january 23