தந்தை (டைரக்டர் ஷங்கர்) உடன், மகள் அதிதி மோதல்: கலெக்ஷனில், கலக்கப் போவது யாரு?
இயக்குனர் ஷங்கர் படத்துடன், அவரது மகள் அதிதியின் படமும் மோதலுக்கு வந்துள்ள ருசிகர நிகழ்வு பார்ப்போம்..
பொங்கலை பண்டிகையை முன்னிட்டு பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படங்கள் களத்தில் இறங்குகின்றன.
இந்த படங்களுடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியன் நடித்த ‘படைத் தலைவன்’, சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, சிபிராஜ் நடித்த டென் ஹார்ஸ், ஷான் நிகம் நடிப்பில் உருவாகியிருக்கும் மெட்ராஸ்காரன், கிஷன் தாஸின் ‘தருணம்’ ஆகிய படங்களும் வரவிருக்கின்றன.
இந்நிலையில், இந்த பட்டியலில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி நாயகனாக நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். அவருக்கு ஜோடியாக தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
‘நேசிப்பாயா திரைப்படம்’ பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சேலஞ்ச் என்னவென்றால் ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு போட்டியாக, அவர் மகள் அதிதி ஷங்கரின் படமும் ரிலீஸாக உள்ளதால், “தந்தை – மகள் இடையே பாக்ஸ் ஆபீஸ் மோதல் எப்படியிருக்கும்” என சுவாரஸ்யமாய் திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.