ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படம் இன்று பூஜை; விவரம்..
ராஜமௌலியும் மகேஷ்பாபுவும் இணையும் படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
இந்திய அளவில் மாஸ் இயக்குனராக வலம் வரும் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மெஹா ஹிட்டானது.
இதனையடுத்து, மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SSMB29’ என வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பட்ஜெட் 600 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாகவும், ஹாலிவுட் நடிகர்கள் சிலர் ஒப்பந்தம் செய்ய ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக ராஜமெளலி – மகேஷ் பாபு இணையும் படம் எப்போது ஆரம்பிக்கும் என பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், மகேஷ்பாபு தற்போது இந்த படத்தில் நடிக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இன்று காலை பிரம்மாண்ட பூஜை போடப்பட்டுள்ள நிகழ்வு குறித்த பதிவுகள் தற்போது இணையமெங்கும் வைரலாகி வருகிறது.
மேலும்,பூஜைக்காக மகேஷ் பாபு தனது விலையுயர்ந்த சொகுசு காரான ‘ரேஞ்ச்’ ரோவரில் சென்ற காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.
ஜனவரி மாதமே ஷூட் ஆரம்பிக்கப்படும் நிலையில், 2026 தீபாவளி அல்லது 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.