விடாமுயற்சி : மகிழ்திருமேனி பிறந்தநாள், போஸ்டர் வெளியிட்ட லைகா நிறுவனம்..!

மகிழ் திருமேனியின் பிறந்தநாளுக்கு லைகா நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் படக்குழு மௌனம் காத்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

Vidaamuyarchi Magzhil Thirumeni's Happy birthday
Vidaamuyarchi Good Bad Ugly Ajith Kumar stills

இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி அவர்களின் பிறந்த நாளான இன்று விடாமுயற்சியின் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் லைக்கா நிறுவனம் அவருக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.