தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அமைச்சர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்..
தமிழ் திரைப்பபட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அமைச்சர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பையனூரில் உள்ள இடம் குறித்த கோரிக்கை தொடர்பான கலந்துகோலாசனைக் கூட்டம் நடைபெற்றது.இன்று (04.11.2024) தலைமை செயலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் முன்னிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பையனுாரில் உள்ள இடம் குறித்த கோரிக்கை தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை முதன்மை செயலாளர் திருமதி. பெ. அமுதா இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.வே. ராஜாராமன் இ.ஆ.ப., தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு.என். இராமசாமி (எ) முரளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும், திரைப்பட நலவாரிய குழு உறுப்பினரும், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு.பூச்சி.எஸ்.முருகன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி மற்றும் பன்னீர்செல்வம், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செந்தில், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன், இவர்களுடன், இளவரசு, இயக்குனர் லிங்குசாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.