சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுதானா.. முழு விவரம் இதோ.!!
சூர்யா 45 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

suriya 45 movie title update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
மேலும் திரிஷா, சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதாவது “வேட்டை கருப்பு” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஜூன் மாதம் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

suriya 45 movie title update viral