கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணியா? அப்டேட் கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.!!
ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து பேசி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அசோக்செல்வன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்னத்திடம் ரஜினியை வைத்து படம் இயக்கப் போகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மணிரத்னம் ரஜினி சாரை தான் கேட்கணும் என்றும் பின் அவருக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் அவருக்கு அதைக் கேட்க நேரம் இருந்தால் கண்டிப்பாக அவரை நான் கேட்பேன் ரொம்ப பெரிய ஸ்டார் உடன் படம் பண்றோம் என்றால் அதற்கு ஏற்றத் தீனி இருக்க வேண்டும் சாதாரணமான கதையை வைத்துக் கொண்டு பெரிய ஸ்டார் கிட்ட போக முடியாது அவருடைய மார்க்கெட்டையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
