Web Ad 2

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்.. வைரலாகும் பதிவு..!

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சரத்குமார்.

sarathkumar wishes to varalaxmi birthday
sarathkumar wishes to varalaxmi birthday

80ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகள்கள் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை ராதிகாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

சமீபத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரலட்சுமி தொடர்ந்து கணவரோடும் குடும்பத்தோடும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று வரலட்சுமி பிறந்தநாள் என்பதால் அவருடைய அப்பா சரத்குமார் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்புள்ள வரு. உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் ஆரோக்கியம் செல்வம் மகிழ்ச்சி கிடைக்கட்டும். உங்கள் எல்லாம் முயற்சிகளிலும் சிறந்து விளங்கட்டும் என்று சொல்லிவிட்டு அன்பான அப்பாவின் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வரலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)