நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ,இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். முற்றிலும் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்க, அவர்களுடன் இணைந்து அனிகா ,மேத்யூ தாமஸ், பிரியா வாரியார், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ott குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வரும் மார்ச் 21ஆம் தேதி இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
