எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி
‘இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்’ என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்..
ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார்.
இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கு காரணம், ஜி்.வி. பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என பலர் கூறினர். அந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இருப்பினும், ஜி.வி. பிரகாஷின் இசை கச்சேரியில் கலந்துகொண்டு சைந்தவியும் பாடினார். அது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இச்சூழலில் சைந்தவி கூறியதாவது, ‘ஜிவி பிரகாஷ் இசையில் நான் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறேன். அவர், இப்போது எனக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கிறார்.
நாங்கள் இரண்டு பேரும் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறோம். நாங்கள் பெர்சனலாக பிரிந்தாலும், இசை ரீதியாக எங்களது ரிலேஷன்ஷிப் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்’ என்றார். ‘அது இல்லறமாகவும் தொடரட்டும்’ என்கின்றனர் நெட்டிசன்ஸ்.!