Web Ads

ரேணுகா கலந்த மருந்து, மயங்கிய சூர்யா, பதறிப்போன குடும்பத்தினர், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial episode update

moondru mudichu serial episode update

நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் சூர்யா நல்ல வேளை நீ குடிக்காம இருந்தா அதனால ப்ளட் கொடுக்க முடிஞ்சது என்று சொல்ல அதெல்லாம் விடுங்க டாடி எனக்கு படபடப்பா இருக்கு என்று சொல்லுகிறார். ரத்தம் கொடுத்ததுனாலயா என்று கேட்க ,அதெல்லாம் விடுங்கள் டாடி அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு குடிச்சா போதை ஏற மாட்டேங்குது எனக்கு என்னமோ ஆயிடுச்சு. என் உடம்புல என்னமோ ஆயிடுச்சு என்று புலம்ப, அருணாச்சலம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல முன்ன விட நீ இப்பதான் பிரைட்டா இருக்க என்று சொல்லுகிறார். அதெல்லாம் இல்ல டாடி இதற்கு எந்த டாக்டரை பார்த்தால் சரியாகும் சொல்லுங்க என்று கேட்க, குடிய நிறுத்தத டாக்டர் கிட்ட போவாங்க ஆனா உனக்கு போதை ஏராள டாக்டர்கிட்ட போக முடியாது என்று சொல்லுகிறார்.

மூணு வேலையும் சாப்பிட்டு பசி எடுத்தா அப்போ பிரச்சினை தானே அதே மாதிரி தான் ஃபுல்லா குடிச்சோம் போதை ஏறலைன்னா அப்போ உடம்பில் பிரச்சனை தானே என்று புலம்பி விட்டு அங்கிருந்து சென்று வருகிறார். நந்தினியிடம் இவன் குடிக்கிறதுக்காக எவ்வளவு லெவெலுக்கு வேண்டுமானாலும் போவா பார்த்துப்போமா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி சூர்யாவிற்கு பாலில் நாட்டு மருந்து கலக்க ரேணுகா நீ கலக்கு அதுல கலக்குவதற்கு நான் ஒரு மருந்து வச்சிருக்கேன் என்று சொல்லி கிச்சனுக்கு வருகிறார். நீங்களே எல்லா வேலையும் முடிச்சிட்டீங்களா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல சுரேகா அம்மா பிரட் ஆம்லெட் கேட்டு இருக்காங்க நீ அதை மட்டும் பண்ணிக் கொடுத்திடு இந்த பாலா அவங்ககிட்ட கொடுத்தது என்று சொல்லி கொடுக்கிறார். நந்தினி ஃப்ரிட்ஜில் இருந்து முட்டை எடுத்துக் கொண்டு வருவதற்குள் ரேணுகா சூர்யா குடிக்கும் பாலில் மருந்து கலந்து விடுகிறார்.வெண்ணை போட்டு செஞ்சு கொடு நான் சூர்யா சாருக்கு பால் கொடுத்துட்டு வரேன் என்று கிளம்புகிறார்

அருணாச்சலம் சுந்தரவல்லியிடம் நம்ப ஃபேமிலியா எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா என்று கேட்க, ஆபீஸ்ல அவ்வளவு வேலையை வச்சுக்கிட்டு எங்க போக முடியும் சூர்யா எங்கேயாவது போகப் போறான் அவன் முக்கியம் கையெழுத்து போடணும் சொல்லி வைங்க என்று சொல்லுகிறார். அருணாச்சலம் கம்மல் எங்க வாங்குன நல்லா இருக்கு என்று கேட்க, எதுக்குப்பா தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க என்று அங்கிருந்து எழுந்து வர நந்தினி பாலுடன் செல்வதை கூப்பிட்டு நிறுத்தி யாருக்கு இது என்று கேட்கிறார் சூர்யா சாருக்கு என்று சொல்ல அவன் எந்த காலத்துல பால் குடிச்சிருக்கான் என்று சொல்ல அதற்கு நந்தினி பால் நல்லதுதாம்மா என்று சொல்லுகிறார் என் பையனுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு எனக்கு தெரியும் எடுத்துக்கொண்டு போய் சிங்க்ல ஊத்து என்று சொல்ல சூர்யா டம்ளர் வாங்கி பாலை குடித்து விடுகிறார்.

சூர்யா அசோகனுக்கு போன் போட்டு எங்க இருக்கீங்க என்று கேட்க உங்க அக்கா ஏதாவது வேலை கொடுத்துடுவார்களோ பயந்து வெளியே சுத்திக்கிட்டு இருக்க சொல்ல அப்போ வெட்டியா தானே இருக்கீங்க நான் சொல்றது செய்ங்க என சூர்யா அசோகனிடம் போனில் எதையோ சொல்ல, இதைவிட மாமனுக்கு வேற என்ன வேலை எவ்வளவு ஷார்ப்பா வரேன் பாருங்க என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் அசோகன் சரக்கு வாங்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் மேலே வந்து சூர்யாவிடம் எடுத்துக் கொடுக்கிறார். உடனே சூர்யா எனக்கு இந்த சைடு டிஷ் எல்லாம் செட் ஆகாது நான் போய் நந்தினி கிட்ட ஆம்லெட் சொல்லிட்டு வரேன் என்று வந்து நந்தினி இடம் ஆம்லெட் கேட்டுவிட்டு சூர்யா சென்று விட நந்தினி குடிக்கும்போது தானே கேட்பாரு இப்ப எதுக்கு கேக்குறாரு என்று யோசித்துக்கொண்டே ஆம்லெட் செய்து மேலே எடுத்துக் கொண்டு வர சூர்யாவும் அசோகனும் சரக்குடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் இதனை நந்தினி பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

நந்தினி குடிக்க வேணாம் சார் இப்பதான் ரத்தம் எல்லாம் கொடுத்துட்டு வந்து இருக்கீங்க என்று சொல்லி ஆம்லெட் கொடுக்க மறுக்கிறார். உடனே நந்தினி கீழே வை இன்னைக்கு நான் குடிச்சே ஆகணும் என்று உறுதியாக சொல்லுகிறார். நந்தினி வேண்டாம் என சொல்லிக் கொண்டே இருக்க நான் செம டென்ஷன்ல இருக்கேன் நந்தினி, இப்ப இந்த லோக்கல் சரக்க குடிச்சு எனக்கு போதை ஏறுதா இல்லையான்னு நான் செக் பண்ணனும் என்று வலு கட்டாயம் ஆக நந்தினி இடமிருந்து ஆம்லெட்டை புடுங்கி இன்னொரு ஆம்லெட் எடுத்துக்கிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அசோகனுடன் சூர்யா சேர்ஸ் என சொன்னவுடன் அசோகனின் டம்ளர் தெரிந்து கீழே விழ சூர்யா குடித்து விடுகிறார். நந்தினி வேக வேகமாக வந்து அருணாச்சலத்திடம் நாம பட்டப்பாடு எல்லாமே வீணா போயிடுச்சு அசோகன் சார் கூட சேர்ந்து சூர்யா சார் குடிச்சிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அருணாச்சலம் அதிர்ச்சி அடைகிறார்.

சூப்பர் மாமா லவ் யூ மாமா லைட்ட ஒரு ஸ்டெப் ஏறி இருக்க மாமா இரண்டாவது ரவுண்டு ஊத்துறோம் அடிக்கிறோம் என்று சொல்லுகிறார். பிறகு அசோகன் இரண்டாவது ரவுண்டை ஊத்தி கொடுக்க சூர்யா அதையும் குடித்து முடித்துவிட்டு அசோகன் கையில் இருப்பதையும் கையில் வாங்கி, பாரின் சரக்கு எல்லாம் விட இது ரொம்ப சூப்பர் மாமா என்று சொல்ல அருணாச்சலம் வந்துவிடுகிறார். உடனே சூர்யா எனக்கு போதை ஏறிடுச்சு டாடி சூர்யா இஸ் பேக் எனக்கு எல்லாமே சரியாயிடுச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா என் மாமா தான் என்று சந்தோஷமாக சொல்லுகிறார். எனக்காக தேடிக்கிட்டு போய் லோக்கல் சரக்கு வாங்கிட்டு வந்திருக்காரு என்று மீண்டும் எடுத்து குடிக்க போக அருணாச்சலம் தட்டி விட சூர்யா டென்ஷன் ஆகி கீழே விழ அவருக்கு வாயில் நுறை தள்ளி ஃபிக்ஸ் போல் வர குடும்பத்தினர் அனைவரும் பதறிப்போய் சூர்யா சூர்யா என கத்துகின்றனர். சுந்தரவல்லி என்னாச்சு உனக்கு என்னாச்சு என்று பதறிப் போகிறார் நந்தினி இதனை பார்த்து பயத்தில் இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update

moondru mudichu serial episode update