‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு
‘ஃபயர்’ திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்..
‘ஃபயர்’ திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
பெண்கள் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது. எந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்களை காதலித்து ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என படம் பார்த்த பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் ‘ஃபயர்’ படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
‘ஃபயர்’ என்கிற படத்தின் டைட்டிலே ஃபயரா இருக்கிறது. பெற்ற பெண்களை சும்மா செல்லம் கொடுத்து, செல்போனை கொடுத்து, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து விடக்கூடாது.
இந்த உலகம் என்றால் என்ன? நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால்? பாலியலின் கொடுமை என்றால் என்ன? என எல்லாத்தையும் சொல்லி பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
இதைச் சொல்லி வளர்க்கவில்லை என்றால், பல பெண்களை இழந்து விடுவோம். பல பெண்களை தாய் தந்தையர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மெசேஜை சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜே.எஸ்.கே.சதீஷ். அவருக்கு என் பாராட்டுக்கள்’ என கூறியுள்ளார்
இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால், தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 20 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், பெண்கள்தானே நாட்டின் கண்கள்.!