காதலர் தினத்தை முன்னிட்டு, திரிஷா வீட்டுக்குள் குடியேறிய புதியவர்
லவ்வர் டே அன்று தனது வீட்டுக்கு ‘ஒருவரை’ அழைத்து வந்துள்ளார் திரிஷா. இது பற்றிய விவரம் காண்போம்..
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதை ஈடு செய்யும் விதமாக ‘குட் பேட் அக்லி’ தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் திரிஷாதான் ஜோடி.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ தற்போது வரையில் ரூ.125 கோடி வசூல் குவித்திருக்கிறது.
அஜித் படங்களை தொடர்ந்து திரிஷா, தக் லைஃப், சூர்யா-45 மற்றும் ராம், விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காதலர் தினத்தில், திரிஷா வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அதில், புது valentine என பதிவிட்டு தன்னுடைய புது நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த நாய்க்குட்டிக்கு Izzy என தனது பெயரிட்டுள்ளார். My forever Valentine என்று அந்த நாய்க்குட்டி பற்றி கூறியிருக்கிறார்.
சமீபத்தில், திரிஷா ஆசை ஆசையாக வளர்ந்து வந்த Zorro என்ற நாய்க்குட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மன வருத்தம் அடைந்த திரிஷா இப்போது காதலர் தினத்தன்று தன்னுடைய வீட்டிற்கு புதிதாக ‘ஒருவரை’ அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.