Web Ads

85 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’: பப்ளிக் ரிவ்யூ

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷித்து உள்ளனர்.

அவர் ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் விட்டுவிட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

85 வயதில் ஹீரோவாக கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த மக்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையும் கலவையான விமர்சனங்களையும் கொடுத்துள்ளனர். இப்படம் குறித்த பப்ளிக் ரிவ்யூ காண்போம்..

* கவுண்டமணியின் வசன உச்சரிப்பு மற்றும் காமெடி கவுன்டிங், அரசியல் நய்யாண்டி எல்லாம் சிறப்பாக உள்ளது என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

* சமகால அரசியலில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஓட்டுக்காக மட்டுமே அரசியல் நடத்துவதையும் மக்களுக்குத் தேவையான எந்தவொரு முன்னேற்றத்தை பற்றியும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதையும் தோலுரித்துக் காட்டியுள்ளனர். பாராட்டப்பட வேண்டிய படம்.

* காமெடி படமாகவும், அரசியல் படமாகவும் கமர்ஷியல் படமாகவும் இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ உள்ளதாக இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.

* கவுண்டமணி செந்திலுடன் மட்டும் தான் நடிப்பார் என பார்த்தால் யோகி பாபு, மொட்டை ராஜேந்தர் என பல காமெடி நடிகர்களுடன் இணைந்து தன்னால் கலக்கலான காமெடி நடிப்பை கொடுக்க முடியும் என இந்த படத்தில் நிரூபித்துள்ளார். படம் ரசிக்கும்படி இருக்கிறது என இன்னொரு ரசிகை தெரிவித்துள்ளார்.

* படத்தில் உள்ள கதைக்கு தேவையான அளவுக்கு பட்ஜெட் செலவு செய்து யோகிபாபுவின் ‘மண்டேலா’ படம் போல எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால், சீரியல் போல உள்ளது. கவுண்டமணியை வைத்து இன்னமும் நல்ல படம் எடுக்கலாம் எனவும் இன்னொரு ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

otha votu muthaiya movie public review