தனுஷுக்கு ஓகே, சிம்புவுக்கு நோ, ஏன் இப்டி?: அனிருத்திற்கு ரசிகர்கள் கேள்வி

அனிருத்துக்கு, சிம்பு ரசிகர்கள் கேள்விக்கணை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்..

சிம்பு பிறந்த நாளில் வெளியான, சிம்புவின் 49-வது படம், 50-வது படம் மற்றும் 51-வது படம் என்பது தெரிந்ததே.

இந்த 3 படங்களில் 50-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இதில் 49-வது படம் மற்றும் 51-வது படத்தில் இசையமைக்க, சிம்பு தரப்பில் இருந்து அனிருத்தை அணுக, அவர் நோ சொல்லி அனுப்பியுள்ளார். சிம்புவும் அனிருத்தும் நெருக்கமானவர்கள் தான். இருந்தும், சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒத்துக் கொள்ளாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு படங்களுக்குமே அனிருத் நோ சொன்னது, சிம்புவுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தனுஷ் கமிட்டாகி உள்ள அடுத்த படத்திற்கு மட்டும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் அனிருத்.

அதாவது, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்துக்கு மட்டும் அனிருத் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட சிம்பு ரசிகர்கள், அனிருத்துக்கு தனுஷ்னு சொன்னா மட்டும் இனிக்குதோ? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரத்தில் ‘பீப் சாங்’ விவகாரத்தினை மனதில் வைத்துதான் அனிருத், முடியாது எனக் கூறி இருப்பாரோ? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள். இது பற்றிய விவாதத்திற்கு அனிருத் முற்றுப்புள்ளி வைப்பாரோ., பார்க்கலாம்..!