விஜய் படத்திற்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் படம் ரீ ரிலீஸ்?
சச்சினுக்கு போட்டியாக ரஜினி முருகன் வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்..
கடந்த 2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது ‘ரஜினி முருகன்’.
இப்படத்தில், சிவகார்த்திக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியானார். படத்தில், சூரி- சிவகார்த்திகேயன் கூட்டணியில் நிகழும் காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும்,ராஜ்கிரண், சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, உள்பட பலர் நடித்திருந்தனர். ரூ.22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
‘ரஜினி முருகன்’ திரைப்படம் வெளியாகி சுமார் 9 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக பாபா, கில்லி, 3, ஆளவந்தான், போன்ற படங்கள் ரீ-ரிலீஸின்போது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தளபதி விஜய்யின் சச்சின் படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ‘ரஜினி முருகன்’ மார்ச் மாதம் ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக, தியேட்டரில் தான் போட்டின்னா, ஓடிடி.யிலும் போட்டியா? எப்டியோ.. ரசிகர்களுக்கு குஷிதான்.!