விழிகள் விலகினாலும் உள்ளமெல்லாம் லப் டப் லவ் டஃப்: ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி சந்திப்பு வைரல்..
‘தாமரை மேலே நீர்த்துளி போலே, தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப இசையும் குரலும் இன்னும் இருக்கலாமா.? லவ் பண்ணுங்க கண்ணுங்களா.. என்கிறார்கள் நெட்டிசன்கள்.. அதாவது, சமாச்சாரம் என்னன்னா..
ஒரு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறப்பான ஆண்டாகவே 2024 அமைந்துள்ளது. கேப்டன் மில்லர், தங்கலான் லக்கி பாஸ்கர்.
மேலும், அமரன் படத்தின் இசை அனைவராலும் பாராட்டைப் பெற்றது. இது மட்டுமில்லாமல், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இவர் இயற்றி, ரிலீஸ் செய்யப்பட்ட ‘கோல்டன் ஸ்பேரோவ்’ பாடலும் ஹிட் ஆனது.
இந்நிலையில், அமரன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் பாராட்டைப் பெற்ற நிலையில், 22-வது சென்னை சர்வதேச திரைப்படத் விழாவில், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதினை அமரன் படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்குமார் வென்றார். இந்த விருதினை அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட பலர் இணைந்து வழங்கினர்.
அப்போது, மேடையில் அமர்ந்திருந்த பாடகியும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் முன்னாள் மனைவியுமான சைந்தவி, வெகு உற்சாகமாக, ஓயாமல் கைகளைத் தட்டினார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது.
ஜி.வி. பிரகாஷ்குமாரும் சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், இந்த ஆண்டு மே மாதம் தாங்கள் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர்.
அண்மையில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடத்திய இசைக் கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாடினார். இதனால், இருவரும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தது. அதேநேரத்தில், ஜி.வி. பிரகாஷ் அம்மாவும் ‘இருவரும் இணைந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்’ என தெரிவித்தார்.
இந்நிலையில், விருது விழாவில் ஜி.வி.பிரகாஷை விழி விரிய பார்த்து, சைந்தவி வேகமாக கைதட்டி உற்சாகப்படுத்தி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள், ‘என்னதான் விவாகரத்துனு சொல்லி பிரிஞ்சுட்டாலும், உள்ளுக்குள்ள அந்த காதல் இருக்கத்தானே செய்யும்’ என உருகி வருகின்றனர்.
விழிகள் விலகிச் சென்றாலும், உள்ளம் லப் டப்.. லப் டப்.. என அழைத்துக் கொண்டேயிருக்கும். இப்பெல்லாம் லவ் டஃப்பா தான் இருக்கு. இருந்தாலும், நெருங்க நெருங்க சரியாகி விடும்.!