‘மாமன்’ படத்தில் சூரிக்கு தங்கையாக சுவாசிகா கமிட்..

‘தங்கை மேல அண்ணனுக்கு அளவு கடந்த பாசமுங்க, ஆஸ்தி உசிரு ஆவியெல்லாம் அவதாங்க, அப்டி ஒரு சென்டிமென்ட் கதைங்க’ அண்ணன் சூரி, தங்கச்சியா யாரை கமிட் பண்ணலாம்? வாங்க பார்க்கலாம்..

சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி செம ரீச் ஆனதால், சூரிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன.

இதனையடுத்து, சூரியை ஹீரோவாக ‘விடுதலை’ படத்தின் மூலம் களத்தில் இறக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிட்டியது. இதனால், இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி இன்று வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், ராம் இயக்கத்தில், சூரி நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில், சூரி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு, இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி இருவரும் ‘மாமன்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ‘லப்பர் பந்து’ நடிகை சுவாசிகா சூரிக்கு தங்கையாக நடிக்கிறார்.

படத்தில், சூரிக்கும் சுவாசிகாவிற்கும் இடையில் நடக்கும் வாழ்வியல் நிகழ்வுகள் மண் வாசனையோடு உருவாக இருக்கிறதென கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

பாசமலர், கிழக்கு சீமையிலே, பொற்காலம், அண்ணாத்த வரிசையில் மீண்டும் ஓர் அண்ணன் தங்கை பாசத்தை, சூரியின் நடிப்பில் எப்படி வந்திருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

actor soori in brother and sister life 'maaman' movie
actor soori in brother and sister life ‘maaman’ movie