ஆன்மீக கதையில், வக்கீல் மற்றும் அய்யனார் வேடங்களில் சூர்யா..
‘சூர்யா-45’ படத்தின் தகவல்கள் காண்போம்..
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படமான ‘சூர்யா45’ படத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரிஷா ஜோடியாகி உள்ளார். முன்னதாக மௌனம் பேசியதே, ஆறு, ஆயுத எழுத்து, ஆகிய படங்களில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில், ஷிவதா, சுவாசிகா, நட்டி, யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படம் ஆன்மீகம் கலந்த ஒரு கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சூர்யா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரம் மற்றும் அய்யனார் என இரு வேடங்களில் வருகிறார். இதற்கு முன்னதாக சூர்யா ’24’ படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக வந்த ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ படத்தில் 2 வேடங்களில் நடித்திருந்தார்.
அதேபோல மாற்றான், 7ஆம் அறிவு, வேல், பேரழகன் ஆகிய படங்களில் டூயல் ரோலில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார்.
ஏற்கனவே இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி ஆன்மீக கதையை மையப்படுத்தி எடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் வரவேற்பை கொடுத்தது. தற்போது இதன் 2-ம் பாகத்தை நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கவுள்ளார்.
