எஸ்கே மூவி: விஜய் சேதுபதி, ரவிமோகன் வரிசையில் வில்லன் ஆகிறாரா ஆர்யா?
மாறுபட்ட கேரக்டராக இருக்கும் பட்சத்தில் வில்லனாக நடிப்பதும் கலையின் வெளிப்பாடுதான். அவ்வகையில், விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் வருபவர்கள் பற்றிப் பார்ப்போம்..
சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில், மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸும், பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கராவும் இயக்கி வருகின்றனர். .
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 2018 என்ற வெற்றிப்படத்தை கொடுத்த மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில், வில்லனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. முன்னதாக, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்து வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
