அருணாச்சலத்திடம் கோபப்பட்ட சுந்தரவல்லி, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 18-02-25
நேற்றைய எபிசோடில் நந்தினி மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு உட்கார அவர் தலையில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பிறகு சூர்யாவுக்காக நந்தினி வேண்டுதல் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் நந்தினி சூர்யாவிற்காக வேண்டி அங்கப் பிரதேஷ்னம் செய்துவிட்டு பிறகு வயிற்றில் மாவிளக்கு போட்டு சூர்யா சாருக்கு குணமாகிட வேண்டுமென வேண்டுகிறார். அசோகன் இருப்பவர்களிடம் வந்து டீயும் வடையும் வாங்கிட்டு வரவா என்று சொல்ல சுந்தரவல்லி ஒரு மண்ணும் வேணாம் நீங்களே உங்க தலையில கொட்டிக்கோங்க சூர்யா வந்து நல்லா இருக்காருன்னு டாக்டர் சொல்ற வரைக்கும் எனக்கு பச்சை தண்ணி கூட இறங்காது என்று சொல்லுகிறார்.
பிறகு சூர்யாவை டாக்டர் வந்து செக் பண்ணி பார்க்கின்றார். வெளியில் வந்த டாக்டர் குட் நியூஸ் பேஷன் கிரிட்டிக்கல் கண்டிஷனை வேண்டிட்டாரு இதுக்கு மேல பயப்பட ஒன்னும் இல்ல என்று சொல்ல சுந்தரவல்லி நன்றி சொல்லுகிறார் பிறகு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். சூர்யா எப்படி இருக்கான் என்று கேட்க அவர் கண்ணு முழிக்க இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் என சொல்லுகிறார் உடனே சுந்தரவல்லி நாங்க போய் பார்க்கலாமா என்று கேட்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லுகிறார் டாக்டர். மறுபக்கம் நந்தினி அடி பிரதக்ஷணம் செய்து சூர்யா சார் நல்லாயிருக்க வேண்டும் என வேண்டுகிறார். அங்கு இருப்பவர்கள் எல்லா வேண்டுதலையும் ஒரே நாளிலேயே செஞ்சா இந்த பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திட போகுது நம்ப வைத்திருக்கும் கூழ கொடுக்கலாம் வா என்று இருவரும் வந்து நந்தினி இடம் பேசுகின்றனர்.
அவர்கள் நந்தினி இடம் இந்தக் கூழ் குடிச்சிட்டு வேண்டுதல் செய் என்று சொல்லுகின்றனர். எல்லா பிரச்சனையும் சரியாயிடும் என சொல்ல நந்தினி எதுவும் பேசாமல் வேண்டாம் என தலையை ஆட்டி விட்டு திரும்பவும் நடந்து கொண்டே இருக்க கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார் அந்த நேரம் பார்த்து விஜி கோவிலில் உள்ளே வருகிறார். அசோகன் நல்ல வேலை சூர்யாவிற்கு எதுவோ ஆகல நான் தப்பிச்சேன் என்று மாதவியிடம் சொல்லுகிறார். மாதவி அசோகனைத் திட்ட சுரேகா இது எல்லாத்துக்கும் காரணம் நந்தினி தான் இது எல்லாமே அவளோட பிளான் என்று சொல்லுகிறார். சரி எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். அசோகன் அவ்வளவுதான் அத்தை வீட்டை விட்டு துரத்துட்டாங்களே என்று சொல்ல என்ன துரத்தினாலும் அட்டைப்பூச்சி மாதிரி வந்துகிட்டே தான் இருப்பா அப்படி இல்லனாலும் எங்க அப்பா கூட்டிட்டு வந்துருவாரு என்று சொல்லிக் கொண்டிருக்க டாக்டர் மீண்டும் வந்து இனிமே அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் நீங்க போய் பாருங்க கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க ஆனா கொஞ்ச நாளைக்கு ஆக்டிவா இருக்க முடியாது. ரெஸ்ட்ல தான் இருக்க முடியும் என சொல்லி டாக்டர் அவர்களை பார்க்க அனுமதிக்கிறார்.
உள்ளே குடும்பத்தினர் அனைவரும் செல்ல சுந்தரவல்லி சூர்யாவை தொட்டு பார்த்து அம்மா எனக்கு ஒன்னும் இல்லை என்று அம்மாவை பார்த்து சொல்லு என்று அழுகிறார். உனக்கு இப்படி ஆன உடனே எல்லாரும் எப்படி பயந்துட்டோம் தெரியுமா. அப்படியே துடிச்சு போயிட்டேன் அம்மாவ பாரு சூர்யா என்று அழுகிறார். அருணாச்சலம் அவனுக்கு தான் சரியாயிடுச்சு இல்ல வீடு சுந்தரவல்லி என்று சொல்ல அவன் என் அம்மானு கூப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சுன்னு எனக்கு மறந்து போச்சு தாய்க்குலோ தாய்க்குலோன்னு ஏதோ வாய் வார்த்தைக்கு கூப்பிடுறான் ஆனா நான் அப்படி நினைக்கல, அவன் என் மேல கோவமா இருந்தாலும், நான் அவனுக்கு எப்பவுமே ஒரு நல்ல அம்மாவா இருக்கணும்னு தான் நான் நினைக்கிறேன். டாக்டர் வந்து அவன் பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லும்போது என் மனசு தாங்கிக்க முடியல. அவன் இந்த ஜென்மத்துல என்ன புரிஞ்சிப்பான்னு தெரியாது ஆனால் எனக்கு முன்னாடி அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் நொருங்கி போயிடுவ என்று சொல்லி அழ அருணாச்சலம் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.அருணாச்சலம் சூர்யா பக்கத்தில் நின்று சூர்யா சூர்யா என கூப்பிட அவர் கண் முழித்து பார்க்கிறார்.
உனக்கு ஒன்னும் இல்ல சூர்யா, சரியாயிடுச்சு என்று அருணாச்சலம் சொல்ல எனக்கு என்ன ஆச்சு டாடி என்று கேட்க உனக்கு ஒன்னும் இல்ல நீ கம்ப்ளீட்லீ ஆல்ரைட் டாக்டர் வீட்டுக்கு போகலாம் என்று டாக்டர் சொல்லிட்டாரு என்று சொல்ல,அசோகன் திடீர்னு உனக்கு வாயில நுரை தள்ளிடுச்சு சூர்யா எங்களுக்கு உயிரே போயிடுச்சு என்று சொல்ல மாதவி இதை எல்லாம் இப்ப சொல்ல வேண்டாம் விடுங்க என்று சொல்லி விடுகிறார். மறுபக்கம் நந்தினி மயங்கி கிடக்க விஜி அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி விடுகிறார். ஏன் நந்தினி இப்படி பண்ணிக்கிட்டு இருக்க, உன்னையே எதுக்கு நீ இப்படி கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்க என்று கேட்க சூர்யா சார் உயிர் பொழச்சி வரணும் அக்கா என்று சொல்ல அதுக்குன்னு இப்படி மயங்கி விழற அளவுக்கா பண்ணுவ என்று கேட்டுவிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் பாக்கலாம் வா என்று கூப்பிடுகிறார். இல்ல இன்னும் எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு என்று அழைத்து செல்கிறார். பிறகு ஒரு இலையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து அதனை கீழே தரையில் போட்டு மண்சோறு சாப்பிடுகிறார். உடனே அங்கு இருப்பவர்கள் யாருக்கு என்ன பிரச்சனை யாருக்காக இந்த பொண்ணு காலையிலிருந்து இவ்வளவு வேண்டுதல் பண்ணிக்கிட்டு இருக்கு என்று சொல்ல, அவர் புருஷன் ஹாஸ்பிடல முடியாம இருக்காரு அதுக்காக தான் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா என்று சொல்ல புருஷன் மேல எவ்வளவு பாசம் இருந்தா இப்படி எல்லாம் பண்ண முடியும் என்று அங்கு இருப்பவர்கள் விஜியிடம் சொல்லுகின்றனர்.
அருணாச்சலம் விஜிக்கு போன் போட்டு நந்தினியை பற்றி விசாரிக்க நான் சொன்ன மாதிரி அதே கோவிலில் தான் இருக்கா எந்த ஒரு வேண்டுதலையும் விடாமல் அவை எல்லா வேண்டுதலையும் செஞ்சுகிட்டு இருக்கா என்று சொல்ல வேண்டுதலா என்னம்மா சொல்ற என்று சொல்ல விஜி நடந்த விஷயங்கள் அனைத்தையும் அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். நந்தினி கிட்ட போன் குடுமா என்று சொல்ல இல்ல சார் அவ இப்போ பேசுற நிலைமையில் உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் வேணாம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல சூர்யாவை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு டிஸ்டார்ஜ் பண்ணிடுவோம் நீங்க வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்லுகிறார் விஜியும் சரி என போனை வைக்கிறார். பிறகு ரூமில் சூர்யா படுத்துக்கொண்டு இருக்க நர்ஸ் செக் பண்ணிவிட்டு பிபி எல்லாம் நார்மலா தான் இருக்கு ஏதாவது டவுட் வந்தால் டாக்டருக்கு போன் பண்ணி பேசிக்கோங்க என்று சொல்ல சுந்தரவல்லி சூர்யா பக்கத்தில் உட்கார்ந்து என் பையன் பொழைச்சுட்டான் என் பையனுக்கு ஒன்னும் இல்ல என சூர்யாவை தொட்டு பார்த்து கண் கலங்கி அழுகிறார். மீண்டும் விஜிக்கு அருணாச்சலம் போன் போட்டு என்னமா ஆச்சி என்று கேட்க நாங்க இன்னும் கோவில்ல தான் சார் இருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பி விடுவோம் ஹாஸ்பிடலுக்கு வரவா என்று கேட்க இல்ல இல்ல வீட்டுக்கு வந்துருங்க என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் விஜி நந்தினி உடன் வீட்டுக்கு வர சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நீங்க சூர்யாக்கு தான் அப்பா அவளுக்கு ஒன்னும் அப்பா இல்லையே என்று கேட்கிறார்.
சூர்யாவிடம் விஜி உங்களை நம்பி இந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்கா இல்ல அவ ரொம்ப பாவம் எவ்வளவு துடிச்சு போயிட்டா தெரியுமா என்று சொல்ல யாரு நந்தினியா என்று சூர்யா கேட்கிறார் அதற்கு விஜய் ஆமாம் என்று சொல்கிறார்.
சூர்யா சாருக்கு இவ்வளவு தூரம் உடம்பு முடியாமல் போனதுக்கு காரணமே நான் கொடுத்த மருந்து தானே என்று அருணாச்சலத்திடம் நந்தினி சொல்ல ரேணுகா இதை வீடு துடைத்துக் கொண்டே கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 18-02-25