சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 05-04-35
Moondru Mudichu Serial Today Promo Update 05-04-35

நேற்றைய எபிசோடில் சூர்யாவும் நந்தினியும் கோவிலுக்கு வந்து நந்தினி சூர்யா பேரில் அர்ச்சனை செய்ய சொல்ல, சூர்யா நந்தினி பெயரில் அர்ச்சனை பண்ண சொல்லுகிறார். மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்க அர்ச்சகர் ரெண்டு பேர் பேருக்கும் பண்ணிடலாம் என சொல்லி சேர்த்து அர்ச்சனை செய்கிறார். பிறகு கோவில் பிரகாரம் சுத்தி விட்டு வரும்போது சூர்யா தாங்கிக்கொண்டே வர ஒரு கட்டத்திற்கு மேல் அவர் வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விடுகிறார். என்கிட்ட ஏன் சொல்லல என்று சொல்ல அவங்க முன்னாடியே சொன்னா கெத்து போயிடும் என்று சொல்லிவிட்டு நந்தினி சூர்யாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வாங்க நீவி விட்டா சரியா போயிடும் என்று சொல்லி அழைத்து செல்கிறார்.

பிறகு நந்தினி சூர்யாவை உட்கார வைத்து காலை எடுத்து மடி மீது வைத்து என்னை விட்டு நீதி விட்டால் சரியா போயிடும் இல்லனா புசுபுசுன்னு வீங்கிடும் என்று சொல்ல உன் கண்ணம் மாதிரியா என்று கேட்க இதுல ஒன்னும் கொறச்சல் இல்லை என்று சொல்ல, நந்தினி எண்ணெய் தேய்த்து விடுகிறார். அர்ச்சனா அந்த நேரம் பார்த்து வர என்னாச்சு சூர்யா என்று கேட்க நந்தினி சண்டை போடும்போது கால் வீங்கிடுச்சு என்று சொல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாமே என்று அர்ச்சனா சொல்லுகிறார்.ஆனால் நந்தினி இப்படி நீவீ விட்டாலே சரியா போயிடுவோம் என்று சொல்லுகிறார். உடனே சூர்யா நந்தினியிடம் இங்கே ஏதாவது செக்யூரிட்டி வேலை காலியா இருக்கா என்ன எப்ப பார்த்தாலும் இங்கேய நின்னுகிட்டு இருக்காங்க என்று சொல்ல அமைதியா இருங்க சார் என்று சொல்லுகிறார்.

உட்காருங்க அர்ச்சனமா என்று சொல்ல ஆமா உக்காந்து இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் கவனிக்க சொல்லு என்று சொல்லல அதற்கு நந்தினி அவங்க ரெசார்ட்ல என் உயிரை காப்பாத்துனது அவங்க தான் என்று சொல்ல யாரு கடத்தினவனே தெரியலையே என்று சூர்யா சொல்லுகிறார் அன்னைக்கு மட்டும் நான் போதையில் இல்லைனா அன்னைக்கே கண்டுபிடிச்சிருப்பேன் என்று சொல்லிவிட்டு இங்கிருந்து நீ கெளம்பு என்று துரத்தி விடுகிறார். அருணாச்சலம் உக்காந்து கொண்டு இருக்க கல்யாணம் காபி கொடுக்கிறார் நந்தினி எங்கே என்று கேட்க ஏன் நான் கொடுத்த குடிக்க மாட்டீங்களா என்று கேட்க, அதுக்கு இல்ல கல்யாணம் நேத்து நந்தினிக்கு அடிபட்டிருச்சுல்ல அது தான் கேட்டேன் என்று சொல்ல அவங்க பாட்டுன்னா உங்க வேலைய பார்க்க ஆரம்பித்து விட்டுட்டாங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலத்திற்கு பங்காளி ஒருவர் போன் போட்டு பத்திரிக்கை கொடுக்க வருவதாக சொல்ல அருணாச்சலமும் வர சொல்லி விடுகிறார். அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி ஆபீஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு என்று சொல்ல, அதெல்லாம் போக வேண்டாம் எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். மாதவியும் சுரேகாவும் அசோகனும் வெளியில் போக வேண்டும் என்று சொல்ல யாருமே இன்னிக்கு எங்கயும் போக வேண்டாம் எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கோங்க என்று சொல்லுகிறார். நம்மள மதிச்சு வராங்கன்னா நம்ம ரெண்டு பேரும் இருந்தா தான மரியாதையா இருக்கும் என்று சொல்ல சுந்தரவள்ளியும் மாதவியும் சரியென சம்மதிக்கின்றன.

அருணாச்சலம் நந்தினியிடம் ஊர்ல இருந்து தெரிஞ்சவங்க பத்திரிகை கொடுக்க வராங்க என்று சொல்ல நந்தினிக்கும் அவர்களை தெரிந்திருக்கிறது விருந்து எல்லாம் அசத்திடணுமா என்று சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் ஐயா என்று சொல்லி நந்தினி பரபரப்பாக கிச்சனுக்கு வந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று கல்யாணத்திடம் லிஸ்ட் போட்டு சொல்லிவிட்டு நந்தினி வேலையை ஆரம்பிக்கிறார்.

சூர்யா கார் ஓட்டிக்கொண்டே நந்தினி சொன்ன மாதிரி கால் வலி சுத்தமா போயிடுச்சு என்று யோசித்துக் கொண்டு வர, அருணாச்சலம் போன் போட்டு ஊர்ல இருந்து பங்காளிங்க பத்திரிக்கை வைக்க வராங்க சீக்கிரம் வந்துடு என்று சொல்ல, சூப்பர் டாடி எப்ப இருந்தாலும் வந்து கூப்பிட்டு போறாங்க என்று சொல்ல, நம்ம இங்க பொழைக்க தான்டா வந்து இருக்கோம் என்னைக்குமே அதுதான் நம்ம ஊரு என்று சொல்ல உங்க ஊர் பெருமையை நான் வந்து கேட்கிறேன் டாடி என்று சொல்கிறாய். கல்யாணம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து விட எங்க ஊர்ல பத்திரிக்கை வைக்க வர எல்லோருக்கும் விருந்து போட்டு தான் அனுப்புவோம் என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம எல்லா பத்திரிக்கையும் ஒரு ஆணில சேர்த்து வைப்போம் அப்பதான் யார் யார் என்ன மொழி செஞ்சிருக்காங்கன்னு தெரியும் அதுக்காக தான் இதெல்லாம் வெச்சிருப்பாங்க என்று சொல்ல, கல்யாணம் உனக்கு உடம்பு மட்டும்தான் இங்க இருக்கு உசுரெல்லாம் ஊர்ல தான் இருக்கு என்ற சொல்லுகிறார்.

நந்தினி சமைத்துக் கொண்டு இருக்க கல்யாணம் வாசன தூக்குதம்மா நீ என்ன சமைச்சாலும் செமையா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலத்தின் பங்காளிகள் வர குடும்பத்துடன் சென்று அவர்களை வரவேற்கின்றனர். அருணாச்சலம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி வைக்க சுரேகா ஆன்ட்டி என சொல்ல சித்தினு கூப்பிடு இல்லனா சின்னம்மான்னு கூப்பிடு என்று சொல்ல அருணாச்சலம் இப்ப எங்கம்மா அப்படியெல்லாம் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க நந்தினி வந்து அவர்களிடம் விசாரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது உடனே அருணாச்சலம் நீ போய் சாப்பாடு எடுத்துவைமா என்று அனுப்ப அவர்கள் சூர்யாவை கேட்கின்றனர் வெளியே போய் இருக்கா வந்துருவான் என்று சொல்ல, ஊர்ல இருந்து வந்து சென்னையிலேயே நீங்க இவ்ளோ வளர்ந்து இருக்கீங்க என்று சொல்ல இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாத்துக்கும் காரணம் சுந்தரவல்லி தான் என சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் வந்த விருந்தாளியிடம் நந்தினி இந்தப் பேச்சை இப்படியே விட்டுடுங்க இதைப்பற்றி ஊர்ல யார்கிட்டயும் சொல்லாதீங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூரியா இந்த வீட்டில் பொறுப்பா இருக்கிறது என் பொண்டாட்டி தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குறோம் என்று சொல்ல நந்தினி மறுக்கிறார்.

சுந்தரவல்லி அந்தப் பத்திரிக்கையில இவ பேரு இந்த பத்திரிக்கையில என் பேரு என்ன அப்ப நானும் இவளும் ஒன்னா என்று கோபப்பட அப்படியெல்லாம் இல்லமா என்று நந்தினி பேச வர சூர்யா நந்தினி தடுத்து நான் பேசுறேன் என்று சொல்லுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 05-04-35
Moondru Mudichu Serial Today Promo Update 05-04-35