ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜனநாயகம் படத்தின் ஷூட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

Super information released about the shooting of the film JanaNayagan..!
Super information released about the shooting of the film JanaNayagan..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் 15ஆம் தேதிக்குள் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Super information released about the shooting of the film JanaNayagan..!
Super information released about the shooting of the film JanaNayagan..!