Pushpa 2

மூக்குத்தி அம்மன் ஒன்னும் டைட்டானிக் இல்லை.,ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்..!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே வாக இருந்து ஹீரோ, நடிகர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Mookuthi Amman is not titanic.,RJ Balaji Open Talk..!
Mookuthi Amman is not titanic.,RJ Balaji Open Talk..!

இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இரண்டாம் பாகமும் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் சுந்தர் சி இயக்குவார் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இதனால் சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜியிடம் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்காததற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அவர், மூக்குத்தி அம்மன் 2 இயக்க இன்ட்ரஸ்ட் இல்லை என்றும், அந்த ஐடியாவே இல்லை என்பதால் தான் வேறு இயக்குனரை வெச்சு பண்றாங்க இது மட்டும் இல்லாமல் மூக்குத்தி அம்மன் ஒன்னும் டைட்டானிக் இல்லை. மூக்குத்தி அம்மன் இல்லனா மாசாணி அம்மன் அதுவும் இல்லனா 108 அம்மன் பெயர் இருக்கு அதில் ஒன்றை வைத்து இயக்குவேன் என்று பேசி உள்ளார்.

இவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மட்டும் இல்லாமல் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்கப் போவதும் குறிப்பிடத்தக்கது.

Mookuthi Amman is not titanic.,RJ Balaji Open Talk..!
Mookuthi Amman is not titanic.,RJ Balaji Open Talk..!