சாச்சனா பற்றி பேசிய அன்ஷிதா, மஞ்சரி..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி முத்துக்குமரன் என்பதால் தான் இந்த விஷயத்தை நான் செய்தேன். இது சௌந்தர்யாவிற்கும் தெரியும் என்று அழுது கொண்டே கத்தி சொல்லுகிறார்.
அதற்கு நடுவில் அருண் பேச யாரும் இதற்காக பேச தேவையில்லை என்று சொல்ல நான் கேப்டன் பேசி தான் ஆக வேண்டும் என்று அருன் சொல்லுகிறார். யாரும் பேச வேண்டாம் என்று மஞ்சளை சொல்லிவிட்டு செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஸ்டார்ட் ஆக சரியான காரணத்துடன் இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல போட்டியாளர்கள் நாமினேஷன் செய்கின்றனர்.
அதில், சிவக்குமார், ஜாக்குலின், அருண், சௌந்தர்யா, ஆகியோரின் பெயரை சொல்கின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கிராசரீஸ் டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் சாச்சனாவை குறை சொல்ல, அதற்கு சாச்சனா நான் மட்டும்தான் தப்பு பண்ண நான் என்று தர்ஷிகா மற்றும் சௌந்தர்யாவிடம் கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram