Pushpa 2

கமல் பிறந்த நாளில், மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ டீசர் இதோ வெளியீடு..

கலைகளுக்கெல்லாம் கலையாய் வந்த அரிய கலைதான் ‘கலைஞானி’ கமல்ஹாசன் என்றால் மிகப் பொருந்தும்.

ஆம்.., உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த மகிழ்வான சூழ்நிலையில், அவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ திரைப்டத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம் பார்ப்போம்..

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ்த்திரைக்கு மட்டுமல்ல, இந்திய திரைக்கே ஒரு சகாப்தம். சிறு வயதிலிருந்தே கேமரா முன் நிற்கும் அவர் சினிமாவின் அனைத்து ஜானரிலும் தனித்துவம் பெற்றவர்.

233 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவைக் கடந்து, உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர்.

அவர், இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் அப்டேட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அவகையில், நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம், திரை ஆர்வலர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் வரவேற்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் இவர்களுடன் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மணிரத்னம் படத்திற்கு வழக்கம்போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

தக் லைஃப் டீசர் 45 செகன்ட் ஓடும் காட்சிகளில் பிரம்மாண்டம் தெறிக்கிறது. கமல்ஹாசன் புது கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார்.

இறுதியாக வரும் ஃப்ரேம்களில் ‘விண்வெளி நாயகா.. வினை தீர்க்க வா..’ என்ற பேரொலி அதிர முடிகிறது. இப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘தக் லைஃப்’ டீசரை ரசிகர்கள் ஷேர் செய்வது வைரலாகி வருகிறது.

kamalhaasan birthday special thug life movie release date
kamalhaasan birthday special thug life movie release date