லோகேஷ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் ரெஜினா காசண்ட்ரா

நாசர் – ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக் கூட்டணியில் புதிய படம்! டைட்டில் விரைவில் அறிவிப்பு
லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்துள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹரிஹரன் ராஜூ கதை எழுதும் இப்படத்திற்கு எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தையும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

ட்ராமா திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் லோகேஷ் கனகராஜ், நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து படத்தின் அறிவிப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி, விஷால் வெங்கட் இயக்கம் மற்றும் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோரின் கூட்டணி என பல்வேறு அம்சங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The beginning of a massive collaboration.
⭐ @MythriOfficial X @GSquadOffl 🦂
It began with a pooja ceremony and the shoot is in its final leg.
Title announcement soon ❤🔥
Starring @ReginaCassandra @nasser_kameela @thilak_ramesh@Dir_Lokesh… pic.twitter.com/bEegmvBHtx
— Mythri Movie Makers (@MythriOfficial) October 2, 2026