71-வது பிறந்தநாள் விழா: ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ராஜேந்தர்

Web Ads

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு, டி.ராஜேந்தர் தான் எழுதி இசையமைத்த பாடலை நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையிலும் பாடினார்.

“ஆண்டவன் கொடுத்த ஆத்மா
அன்பா வாழ்ந்து காட்டுமா?
இருந்தா எடுத்துக் கொடுக்குமா?
ஏழைத் துயரை துடைக்குமா?

Web Ad 2

வானம் தான் பரந்தது
தானம் தான் சிறந்தது
இரக்க குணத்தில் இறைவன் இருக்கின்றான்
கருணை வடிவில் கடவுள் வாழ்கிறான்

அன்பே தெய்வம்
அறங்கள் செய்வோம்
ஆத்மனை நினைப்போம்
ஆதரவு அளிப்போம்”

என்ற வரிகள் இடம்பெற்ற இந்தப் பாடலை அவர் பாடி, பிறந்தநாள் விழாவை சிறப்பித்தார்.