லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

Web Ads

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை மற்றும் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் பல்வேறு எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், அனைத்து படங்களுக்கும் உரிய திரையரங்குகள் மற்றும் ரசிகர்களின் கவனம் கிடைக்கும் வகையில், ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

Web Ad 2

இதையடுத்து, ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சிரிப்பு, மகிழ்ச்சி என ரசிகர்களுக்கு முழுமையான எண்டர்டெயின்மென்ட் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது.