ரசிகர்களுக்காக சூர்யா செய்த செயல், நெகிழ்ச்சியான சம்பவம் இதோ..!
ரசிகர்களுக்காக சூர்யா நிகழ்ச்சியான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, பாபி தியோல், திஷா பதானி போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில் கேரளாவில் நேற்று மால் ஒன்றில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்தை பார்த்து சூர்யா நெகிழ்ந்து போய் உள்ளார். இந்த அன்பை நான் எப்போதும் என் மனதில் பதிய வைத்திருப்பேன். உங்கள் அன்பு கடவுளுக்கு நிகரானது அதே சமயம் உங்கள் பாதுகாப்பும் முக்கியம் என்று பேசியுள்ளார். அப்போது ரசிகர்களின் அன்பு கடவுளுக்கு சமமானது என்று கூறிய போது மக்களின் ஆரவாரத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட சூர்யா முழங்காலிட்டு கைகளை தூக்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.