விஜய்யின் அரசியல் வருகை குறித்து, ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேச்சு..
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநாடும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் தளபதி விஜய்.
சினிமா நடிப்பிலிருந்து விலகி, முழு நேர அரசியலில் ஈடுபடுவேன், 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கும் அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் விஜய் பேசும்போது, ‘குழந்தை முன்னாடி ஒரு பாம்பு வந்தா, அந்த குழந்தை அதைப் பார்த்து பயப்படாது. அதைப்பார்த்து சிரிக்கும். அதுபோலத்தான் அரசியலும் ஒரு பாம்பு, அதை வைத்து விளையாடத்தான் நான் வந்து இருக்கேன்.
அரசியலுக்கு நாம குழந்தை தான், ஆனால், பாம்பா இருந்தாலும் பயம் இல்லை’ என்பது தான் எங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை’ என முழங்கினார். விஜய்யின் முதல் மாநாடு பேச்சு, சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் மாஸாய் வந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கூறியதாவது:
‘விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை, தமிழகத்தில் எதுவும் சாதிக்க முடியாது, வந்து இருக்கிறார் முயற்சி செய்து பார்க்கட்டும் .
அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசியல் ஆசை விஜய்க்கு உள்ளதால், கட்சி தொடங்கி உள்ளார்.
வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அவரின் செயல்பாடுகளை எப்படி இருக்கிறது என்று பார்ககலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் விஜயால் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம்’ என கூறியுள்ளார். இவரது பேச்சு இணையத்தில் வைரலாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.