‘கங்குவா’ திரைப்படத்தின் ‘மன்னிப்பு’ சிங்கிள் பாடல் வெளியீடு..
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கங்குவா’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவிருக்கிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா படம், உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகின்றது.
நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பட்டாணி, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை மாலை 6:00 மணிக்கு கங்குவா திரைப்படத்திலிருந்து ‘மன்னிப்பு’ என்கின்ற மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த சூழலில் அதன் முன்னோட்டம் இப்போது வெளியாகி உள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கங்குவா’ கதைக்களம் குறித்து சூர்யா தெரிவிக்கையில், ‘கங்குவா’ படத்துக்காக 700 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறோம். இப்படத்தில் 4 தீவுகளைச் சுற்றி கதை இருக்கும்.
அதில் ‘கங்குவா’வின் கடவுள் தீ. ஒரு தீவில் இருப்பவர்களின் கடவுள் தண்ணீர். இன்னொரு தீவுக்கு ரத்தம் என இருக்கும்.
அவர்களுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடு, பேராசை கொள்ளுதல் மற்றும் நெறிமுறைகள் மாற்றினால் என்னவாகும் என்பதே ‘கங்குவா’ கதைக்களம்.
சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும், அதற்கு பின்னால் நல்ல எமோஷன் காட்சிகளும் இருக்கும். அன்பின் தூய்மையான வடிவம் மன்னிப்பு தான் என்று நம்புகிறேன். அதைச் சுற்றி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.’ என்றார்.
அன்பின் தூய்மையான வடிவமான ‘மன்னிப்பு’ பாடலை நாளை கேட்போம்.!