Pushpa 2

நடிகர் நெப்போலியன் மகனுக்கு ஜப்பானில் திருமணம்: திரைப் பிரபலங்கள் பங்கேற்பு..

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..

நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் தடம் பதித்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர்.

மத்திய இணையமைச்சராக இருந்த அவர் தற்போது சினிமா மற்றும் அரசியலிலிருந்து முழுதாக ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

அதற்கு காரணம், அவரது மகன் தனுஷ். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் மூத்த மகன்.

தனுஷுக்கு சிறு வயதிலிருந்தே தசை சிதைவு நோய் வந்துவிட்டது. முதலில் இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அது ஒத்துவரவில்லை. இதனையடுத்து, அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலானார் நெப்போலியன். அந்நாட்டில் தனுஷுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும் தனுஷுக்காகவே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் அங்கே தொடங்கி தனது மகனை ஓனராக்கி அழகு பார்த்தார் நெப்போலியன்.

தன் மகனுக்காக நெப்போலியன் செய்யும் ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் நெப்போலியன்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை பார்த்தார். தனுஷ் – அக்‌ஷயா நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்தது.

அதில் தனுஷால் கலந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் வீடியோ காலில் பங்கேற்றார் தனுஷ். அவர்களது திருமணம் ஜப்பானில் நடக்கிறது.

திருமண நிகழ்வில் குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் உள்பட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

திருமண நிகழ்வுகளை பொறுத்தவரை சங்கீத், ஹல்தி, மெஹந்தி உள்ளிட்டவைகள் நடக்கின்றன. இவற்றில் சங்கீத நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்துகிறார்.

இருமனமும் ஒருமனமாகும் திருமணத்திற்கு நாமும் வாழ்த்துவோம்.!