Web Ad 2

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!

Web Ads

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள Toxic: A Fairy Tale for Grownups திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் 2026 ஜூன் 4 அன்று வெளியாக இருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம், CinemaCon நிகழ்வில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த பாராட்டு, இந்தப் படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தையில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

படம் முழுமையாக தயாராகி முடிந்த நிலையில், தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரின் எழுத்தில் உருவாகி, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ளது.

இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:
“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைக்கிறது. ‘டாக்ஸிக்’ அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் கிடைத்த வரவேற்பு, இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்பதை உறுதிப்படுத்தியது.

படம் தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். அதனால் ஜூன் 4 அன்று வெளியீடு இல்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.

இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நமது பொறுப்பு. சில கதைகள் பொறுமையை கேட்கும்… ‘டாக்ஸிக்’ அவற்றில் ஒன்று. இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”

இந்தப் படத்தில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.