“அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

Web Ads

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். தடகள விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம், விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அங்கீகாரத்திற்கான போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.

வெளியான டிரெய்லரில், தனது உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடும் தடகள வீரரின் காட்சிகள் மற்றும் வலுவான வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், இப்படத்திற்காக ரூ.75 லட்சம் செலவில் பிரம்மாண்ட கோர்ட் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Ad 2

இப்படத்தில் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.