ஜெய் நடிப்பில் உருவாகும் ‘ஒர்க்கர்’ படத்தின் பூஜை..

நடிகர் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வினய்
வினய் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகிபாபு, ரீஷ்மா நனையா, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசிலயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க உண்மைக் கதையை மையப்படுத்திய படமாக உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.
படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி நடைபெற இருக்கிறது.
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஜெய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘பேபி அண்ட் பேபி’ படம் வெளியானது. இந்தப் படம் வரவேற்பு பெறவில்லை. இதில், ஜெய் உடன் இணைந்து யோகிபாபுவும் நடித்திருந்தார். பின்னர் வெளியான ‘கருப்பர் நகரம்’ தாமதமான நிலையில் ஜெய் 34 மற்றும் ஒர்க்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
