Web Ads

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம்: வெற்றிமாறன் அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும், எஸ்டிஆரின் கதாபாத்திரம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார்.

இவர்கள் இணையும் படத்துக்கான ப்ரொமோ ஷுட்டிங்கும் துவங்கி நடைபெற்றது. ஆனால், பட்ஜெட் காரணமாக படத்தினை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தினை தனது சொந்த தயாரிப்பில் இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இப்படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முன்னதாக, தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்துக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து சிம்பு படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் எஸ்டிஆர் கேங்ஸ்டராக நடிக்கவுள்ள நிலையில், இப்படத்துக்கான ப்ரொமோவை உருவாக்குதற்கான ஷுட்டிங் நடந்தது. இந்த அறிமுக வீடியோவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் நடித்தார். இந்நிலையில் வெற்றிமாறனே இப்படத்தினை தயாரிக்க இருப்பதால், விரைவில் இந்த ப்ரொமோ ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையில், தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ பட ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. காலேஜ் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தில் சந்தானம் முக்கியமான ரோலில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார்.

vetrimaaran takes new decision about simbu str 49 movie
vetrimaaran takes new decision about simbu str 49 movie