‘அமரன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்; எப்போது தெரியுமா?
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வரலாற்றுப் படமான அமரன் படத்தில், சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருந்தார்.
அதேபோல், முகுந்தின் மனைவியான இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில், தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் சாய் பல்லவி.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாஸான எனர்ஜி கிடைத்திருப்பதில், படக்குழுவினருக்கு அளவற்ற மகிழ்ச்சி.
அமரன் படம், இதுவரை 200 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவித்திருந்தது. தற்பொழுது 250 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் இணையவுள்ளது.
முன்னதாக, உலக அளவில் 11 நாளில் இந்த படம் சுமார் 248 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தை விட மிகப் பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, படம் ரிலீஸான 28 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்று கருதப்பட்டது. ஆனால், தியேட்டரில் படத்துக்கு இப்போது வரை மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
எனவே, அமரன் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கியிருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் படக்குழு சார்பில், மேலும் ஒரு வாரத்துக்கு ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்கலாம் என்று கேட்டதாகவும், அதற்கு நெட்ஃப்ளிக்ஸும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அமரன் ஓடிடியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்லாம் வர்லாம் அமரா.!