முதல்முறையாக மோதும் அஜித், சிவகார்த்திகேயன்.. ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!
முதன்முறையாக அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் மோத உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது விடா முயற்சி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் சிவகார்த்திகேயன் நடிப்பிலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் உருவாகும் சிவகார்த்திகேயன் 23 திரைப்படமும் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில் முதல் முறையாக ஒரே நாளில் இவர்களது படம் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த இரண்டு படங்களில் ஜெயிக்கப் போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இது மட்டும் இல்லாமல் நீங்கள் எந்த படத்திற்காக காத்திருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.