குட் பேட் அக்லி : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..கொண்டாடும் ரசிகர்கள்..!
குட் பேட் அக்லி படம் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நாட்டில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் குட் பேட் அட்லி படத்தின் தயாரிப்பாளர் கலந்து கொண்டுள்ளார். அப்போது இந்த படப்பிடிப்பு இன்னும் ஏழு நாட்கள் மட்டும் இருப்பதாகவும், பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இது மட்டும் இல்லாமல் தமிழில் எங்களது முதல் படம். பிளாக்பஸ்டராக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.